Pigeons flock ~ birds on Electric wire !!
இதயக்கோவில் படத்தில் இளயராஜாவின் இன்னிசையில் இந்த பாடலை பலமுறை கேட்டு இருப்பீர்கள்.!
கூட்டத்திலே கோவில் புறா; யாரை இங்கு தேடுதம்மா !!
கொலுசுச் சத்தம் கேட்கையிலே மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது
புறா கூட்டமாக வாழும் பறவை இனம். குடும்பமாக வாழ்வதிலும் அவை சிறப்புப் பெற்றவை. முதற் தடவை ஒன்று சேரும் ஆண், பெண் பறவைகள் கணவன்,மனைவியாக வாழ்கின்றன. சங்க இலக்கியத்தில் ஒன்றான - பத்துப் பாட்டில் நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை புகழ்ந்து, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மனையுறை புறவின் செங்காற் சேவல்
இன்புறு பெடையொடு மன்றுதேர்ந் துண்ணாது
இரவும் பகலும் மயங்கிக் கையற்று
மதலைப் பள்ளி மாறுவன இருப்ப .. .. ..
வீட்டுப் புறாக்கள். ...